வேலை வாய்ப்பு செய்திகள்

ஹயகிரிவா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

புதுவை, நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த சூரமங்கலத்தில் உள்ள ஹயகிரிவா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு தங்களது நிறுவனங்களில் வேலை வாய்ப்பை வழங்கின.

இந்த முகாமில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இவர்களில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட நிறுவனங்களுக்கு கல்லூரி சார்பில் நினைவு பரிசை முதல்வர் வழங்கினார்.

Related Articles

Close