உள்ளூர் செய்திகள்

அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் கவர்னருக்கு பதில் அளிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடும் எச்சரிக்கை

புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் தற்போது சிலர் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள். இதை செயல்படுத்தக்கூடாது என்று அமைச்சரவையில் முடிவு செய்தோம். இதுகுறித்த விவரம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நிர்வாகி (கவர்னர் கிரண்பெடி) கூறியுள்ளார். அவருக்கு நிர்வாகம் தெரியாது என்பதை நிரூபித்துள்ளார்.
அவர் வாய்மொழியாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ எந்த செய்தி அனுப்பினாலும் துறை செயலாளர், தலைமை செயலாளர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்றுதான் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன்.
இந்தநிலையில் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மாநில நிர்வாகி கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது. வாட்ஸ் அப் மூலம் புகார் என்பது புதுவை அரசால் அங்கீரிக்கப்பட்ட முறையல்ல. இதுகுறித்து மாநில நிர்வாகியிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் 19 முறை கூறியுள்ளேன்.
கவர்னரை அரசுத்துறை செயலாளர்கள் சந்திக்க செல்லும்முன்பு சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து ஆலோசித்துவிட்டுதான் மாநில நிர்வாகிக்கு விளக்கம் அளிக்க வேண்டும். நேரடியாக அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடும் அதிகாரம் மாநில நிர்வாகிக்கு கிடையாது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker