உள்ளூர் செய்திகள்

ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து முதல்வர் விளக்கம்

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது குறித்து புதுவை முதல்வர் வே.நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
புதுவை அரசின் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
தமிழகத்தில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களைத் திறப்பது குறித்து முடிவெடுத்தது போல, புதுவை அரசு உடனடியாக முடிவெடுக்க முடியாது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டே அவ்வாறு முடிவெடுக்க முடியும். இதுதொடர்பாக வணிகர்கள்,  பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.
நான் (முதல்வர்) ஆளுநருக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வன்முறையைத் தூண்டவில்லை. முதல்வருக்கு போராட்டம் நடத்த உரிமையுண்டு. மக்கள் பிரச்னைக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளோம். 
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. வருமானத்தை உயர்த்தவும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்க  புதிய தொழில்சாலைகளைக் கொண்டுவர முடியவில்லை. இதற்கான பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தந்தாலும், கோப்புகள் காரணமின்றி திரும்பி வருகின்றன.  
இதனால், மாநிலத்தின் வளர்ச்சி குறையும் நிலை உள்ளது.
இந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தாலும், புதுவையின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. இது குறைந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker