உள்ளூர் செய்திகள்

இன்று முதல் கட்டாய ஹெல்மெட்: அராஜக வழியில் பொதுமக்களுக்கு கவர்னர் தொல்லை நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி,
புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுவை மக்கள் மத்தியில் இந்த திடீர் உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது சம்பந்தமாக ஏற்கனவே சுமார் 1½ வருடங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. இதையொட்டி ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக நடைமுறைப்படுத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன் பிரச்சினை முடிந்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சிரமம் இன்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கூறியுள்ளோம். ஆனால் அதிகார துஷ்பிரயோகம் செய்து காவல், போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து கவர்னர் கிரண்பெடி மிரட்டுவதும், பொதுமக்களுக்கு இடையூறாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்துவதுமாக உள்ளார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker