உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடை செய்யவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி,
புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஆலை வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, செயல் தலைவர் அபிஷேகம் ஆகியோர் எதிர்கால செயல்பாடுகள் தொடர்பாக பேசினார்கள். ஆட்டோ சங்க மாநில துணைத்தலைவர்கள் பாளையத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்ரமணியன், வாசு, ஜீவா, முருகன், மாநில செயலாளர்கள் பிரகாஷ், ஜான், சதீஷ்குமார், தேவநாதன், சதீஷ், ராஜி உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
*ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தை உருவாக்கி தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை அமலாக்குவதுடன் ஆட்டோ தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ நிதி உதவி, விபத்து இழப்பீடு, குடும்ப பாதுகாப்பு நிதி, வீடற்றவர்களுக்கு இலவச குடியிருப்பு அல்லது மனைப்பட்டா வழங்கவேண்டும்.
*மத்திய அரசு கொண்டு வரும் சாலை போக்குவரத்து மசோதாவால் போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், உரிமையாளர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker