உள்ளூர் செய்திகள்

ஊழியர்களுக்கு சம்பளமே வழங்காத நிலையில் அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது – சிவா எம்.எல்.ஏ. அறிக்கை

புதுச்சேரி,
 புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், வாரியம், கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் 6 மாதம் முதல் ஆண்டுக்கணக்கில் சம்பளம் பெறாமல் உள்ளனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோடியர் மில் தொழிலாளர்கள் பாதி சம்பளம் மட்டுமே பெற்று வருகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் நிலையும் அதோகதியில்தான் உள்ளது. இதுமட்டுமல்ல அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்கள் நிலுவை சம்பளம், பணிநிரந்தம்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படி இருக்க அரசு துறைகளில் 800 பணியிடங்களை நிரப்பப்போவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஒருபுறம் பணியாற்றும் ஊழியர்களுக்கே சம்பளம் இல்லாதநிலை, மற்றொருபுறம் அரசு பணிக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்யப்போவதாக அறிவிப்பு இவை முரண்பாடானது. புதுவை அரசில் 54 துறைகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker