உள்ளூர் செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பிறந்த நாள் விழா கோலாகலம், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நேற்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இதனை முன்னிட்டு நேற்று காலை 7 மணி முதலே திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
காலை 8 மணியளவில் ரங்கசாமி தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜைகளை முடித்து விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர் மாடியில் உள்ள அறையில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவருக்கு மாலை, சால்வை அணிவித்தும், பூங்கொத்து, பழங்கள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே. ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாறன், முன்னாள் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு, முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், மகளிர் ஆணைய உறுப்பினர் ஜமீலா, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை உரிமையாளர் சங்க தலைவர் திருமால், சிவாஜி மன்ற தலைவர் மாயன், அரியாங்குப்பம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close