உள்ளூர் செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மீது உள்நோக்கத்துடன் விமர்சனம்: ரங்கசாமி குற்றச்சாட்டு

 தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து ஏம்பலம் பேரவைத் தொகுதியில் புதன்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டு ரங்கசாமி பேசியதாவது:
 கூட்டுறவு சக்கரை ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் மதுபானக் கடை உள்ளிட்டவைகளை மூடிவிட்டு, என்னை மூடுவிழா நாயகன் என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்.
 அரசு நடத்தும் நிறுவனத்தை எல்லாம் தனியாருக்கு கொடுக்கலாமா என்று ஆளும் கட்சியினர் யோசனை செய்கின்றனர். தனியார் ஆலைக்கு கரும்பை கொண்டு சென்றால் எடையில் ஏமாற்றுவார்கள் என்று விவசாயிகள் பயப்படுகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணம் தாமதம் ஆனாலும் எடை சரியாக இருக்கும்.
 என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக இளைஞர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வாங்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அதற்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
 வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கின்றனர்.
 இவர்கள் கூற்றுப்படி, இதற்கு முன்பு 18 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்னென்ன வாங்கியுள்ளார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். அனுபவர் இல்லை என்று கூறுகின்றனர். தற்போது அனுபவம் உள்ளவர் எதில் அனுபவம் உள்ளவர் என்றும் என்னென்ன செய்தார் என்றும் மக்களுக்குத் தெரியும். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker