உள்ளூர் செய்திகள்

ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுவை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் வணிக துறை சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு டெல்லியில் இயங்கி வருகின்ற இந்திய பட்டய செயலாளர்கள் நிறுவனத்தோடு (ஐ.சி.எஸ்.ஐ.) புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளள.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு வளாகத்தில் துணைவேந்தர் குர்மீத்சிங் முன்னிலையில் நடந்தது. தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் (பொறுப்பு) சித்ரா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.நிகழ்ச்சியில் இந்திய பட்டய செயலாளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல இணை செயலாளர் சாரா ஆரோக்கிய சாமி, துணை இயக்குனர் சித்ரா அனந்தராமன், பல்கலைக்கழக பதிவாளர் சசிகாந்த தாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker