உள்ளூர் செய்திகள்

கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது; நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சபரிமலை விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி முழுஅடைப்பு போராட்டம் (பந்த்) அறிவித்துள்ளது. இது கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சினை. இதற்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது. பாரதீய ஜனதா கட்சியினர் வேண்டுமானால் கேரளா சென்று போராடட்டும். புதுவையில் போராட்டம் நடத்த எந்தவித முகாந்திரமும் இல்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினையும், பொதுமக்களின் மத சம்பந்தமாக உணர்வுகளையும் கேரள அரசு மதித்தாக வேண்டும். இதை தேவையில்லாமல் பாரதீய ஜனதா அரசியலாக்குகிறது. சட்டம் ஒழுங்கினை குலைக்க இப்போது முழுஅடைப்புக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள். புதுவையில் ஏற்கனவே நிறைய பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker