உள்ளூர் செய்திகள்

கருத்துக்கணிப்புகளின் படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை – ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை (செவ்வாய்கிழமை) மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதுவை எம்.பி. தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை காலாப்பட்டு தொகுதி முழுவதும் திறந்த வெளி வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து உழவர்கரை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு ரங்கசாமி பேசியதாவது:–
புதுவை மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை. புதிய திட்டங்கள், தேர்தல் அறிவிப்புகள் எதுவும் இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய இலவச அரிசி, துணி, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மடிக்கணினி உள்ளிட்ட எதையும் செயல்படுத்தவில்லை. நான் முதல்–அமைச்சராக இருந்த போது பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் புதுவை மாநில அரசு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு வீடு கட்டுவதற்கு ரூ.1½ லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இந்த உதவியுடன் சேர்ந்து ரூ.3½ லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு மாறாக, மத்திய அரசின் ரூ.1½ லட்சம் மானியத்துடன் ரூ.50 ஆயிரம் மட்டும் சேர்த்து, நாம் கொடுத்து வந்த ரூ.2 லட்சமே வழங்குகின்றனர். மக்கள் நலத்திட்டங்களை ஏன் நிறுத்திவிட்டீர்கள்? என்று கேட்டால் எதிர்க்கட்சிகள் தடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் உங்களிடத்தில் தான் உள்ளது. அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி தடுக்க முடியும்? Read More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker