உள்ளூர் செய்திகள்

கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை – நாராயணசாமி ஆவேசம்

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வழக்கம்போல் சமூக வலைதளத்தில், அதிகாரிகளுக்கு போடும் உத்தரவினை நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கவர்னரின் அதிகாரம் தொடர்பாக தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் பலமுறை நான் விதிமுறைகளை கூறியுள்ளேன். கவர்னர் புதுவையின் பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிடுவதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால் அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடுவது, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவர் தன்னிச்சையாக போடும் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை. உத்தரவுபோடும் அதிகாரம் முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்குத்தான் உள்ளது.
தற்போது அதிகாரிகளை மிரட்டும் விதமாக கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். கவர்னர் எதை சொன்னாலும் அதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பவேண்டும். அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யவேண்டும். அதற்கான நிதியாதாரம் பட்ஜெட்டில் உள்ளதா? என்று பார்க்கவேண்டும். கவர்னர் செய்வது எல்லாம் ஓரிடத்துக்கு சென்று வீடியோ எடுத்து விளம்பரம் செய்வதுதான்.
புதுவை, உழவர்கரை நகராட்சி பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதிகளை அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் காரைக்கால் பகுதியும் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை வர உள்ளது. தற்போது கழிவுநீர் வாய்க்கால் கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன. அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் கவர்னர் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker