உள்ளூர் செய்திகள்

சட்டசபையை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் கைது; அடுத்தடுத்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு

புதுச்சேரி,
மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினரும் இதில் பங்கேற்றனர்.
இதையொட்டி புதுவை கம்பன் கலையரங்கம் அருகே நேற்று காலை கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி புறப்பட்டனர். சங்க கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார்.
இதில் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கிறிஸ்டோபர், மோகனகிருஷ்ணன், செல்வன், ஆனந்தகணபதி, சீதாராமன், முனீந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதற்கு மேல் செல்லவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் இருந்தபடி அரசு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீசாரின் தடுப்புகளை மீறி சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker