உள்ளூர் செய்திகள்

சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு

காலாப்பட்டு,
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை 7 மணி கவர்னர் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சுனாமி குடியிருப்பு வரை படத்தை வாங்கி பார்வையிட்ட அவர் அங்குள்ள வீடுகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.
அப்போது அதிகாரிகள் இங்கு மொத்தம் ஆயிரத்து 400 வீடுகள் உள்ளன என்றும், இந்த வீடுகளில் வசிப்பவர்களின் பயன்பாட்டுக்காக தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும், ஆனால் கிடைக்கும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும் மேலும் சில விவரங்களையும் கவர்னரிடம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சுனாமி குடியிருப்பு பகுதி வளாகத்தில் உள்ள சுமார் 2 ஏக்கர் பரப்பிலான காலி இடத்துக்கு கவர்னர் சென்றார். இந்த காலியிடத்தில் புதிதாக குளம் ஒன்றை உருவாக்கும்படியும், மழைக்காலத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் மழைநீரை இந்த குளத்துக்கு திருப்பிவிடும் வகையில் திட்டமிட்டு அந்த குளத்தை உருவாக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு குளம் ஏற்படுத்தினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அதன் மூலம் இங்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker