உள்ளூர் செய்திகள்

ஜிப்மர் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி நாளை புதுவை வருகை

புதுச்சேரி,
புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை புதுவை விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் வளாகத்திற்கு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லையில் போலீசார் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker