உள்ளூர் செய்திகள்

தனிக்கணக்கு தொடங்கியதை தடுக்காதது ஏன்?காங்., என்.ஆர். காங். எம்.எல்.ஏ.க்கள் மோதல் அவையில் கூச்சல்- குழப்பம்

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து பேசியதாவது:-
ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த போது புதுவை மாநிலத்தில் தனி பொது கணக்கு தொடங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது முற்றிலும் தவறானது. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதுதான் இது. அதாவது, தனிப்பொதுக்கணக்கு தொடங்கவில்லை என்றால் புதுவைக்கு கொடுத்து வரும் கடனை முற்றிலுமாக நிறுத்தி விடுவோம் என்ற ஒரு மிகப்பெரிய நிர்பந்தத்தை உருவாக்கி தனி கணக்கை தொடங்கச் செய்தது.
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க கடன் பெறுவது என்பது தவிர்க்க முடியாததாகும். பட்ஜெட்டில் ஏற்படும் இடைவெளி தொகையை மத்திய அரசு தொடர்ந்து அளித்து இருந்தால் புதுவை அரசுக்கு இவ்வளவு பெரிய கடன் சுமை ஏற்பட்டு இருக்காது.
புதுச்சேரி ஒரு சிறிய நிலப்பரப்பை கொண்ட பகுதியாகும். வருவாயை மிகப்பெரிய அளவில் உயர்த்துவதற்கு இங்கு கனிம வளங்களோ இயற்கை வளங்களோ கிடையாது. வரியை உயர்த்தினால் அண்டை மாநிலத்தில் இருந்து வரும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைத்து விடுகிறது. புதுவை மாநிலத்திற்கு தனி பொதுக்கணக்கை தொடங்க ஒப்புதல் அளிக்கும் முன்பு ரூ.2,177 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
அப்போது மத்திய அரசில் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருந்த தற்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு புதுவை மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட்டு இருந்தால் ரூ.2,177 கோடி கடன் பாக்கியை சர்வ சாதாரணமாக தள்ளுபடி செய்திருக்கலாம் அல்லது தனி பொதுகணக்கினை புதுவை அரசு மேல் திணிக்காமல் தடுத்து இருக்கலாம். தற்போதைய முதல்-அமைச்சர் மத்திய மந்திரியாக இருந்த போது அந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்யாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close