உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு: 2 இளைஞர்கள் தலைமறைவு

ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹருசிகேஷ் ஷாகூ (43). இவர், கடந்த 25 ஆண்டுகளாக புதுவை மாநிலம், சேதராப்பட்டில் தங்கி, அங்குள்ள தனியார் தொழில்சாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த பரத் பெயிண்டராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில், ஹருசிகேஷ் ஷாகூ சம்பள பணம் ரூ.8 ஆயிரத்துடன் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். கரசூர் அருகே சென்றபோது, பரத், அவருடன் வந்த ஒரு இளைஞர் சேர்ந்து ஹருசிகேஷ் ஷாகூவை வழிமறித்து, சம்பள பணத்தைக் கேட்டனராம். பணத்தை தராததால் ஹருசிகேஷ் ஷாகூவின் கழுத்தில் அவர்கள் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker