உள்ளூர் செய்திகள்

தவறான தகவல்களை கவர்னர் கிரண்பெடி பதிவிடுகிறார்நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி,
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக சட்டசபையில் அளித்த விளக்கத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. யூனியன் பிரதேசங்களான டெல்லி, புதுச்சேரியில் சட்டமன்றம் இருப்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் நடக்கவேண்டும். கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி வாட்ஸ் அப் மூலம் ஒரு செய்தியை அரசு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பி உள்ளார். அதில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு மட்டும் பொருந்தும், புதுச்சேரிக்கு பொருந்தாது என்று உள்ளது. முற்றிலும் தவறான தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு தொடர்பாக பிரபல வக்கீல் சோலி சொராப்ஜி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் புதுவைக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்று கூறியுள்ளனர். அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். புதுவைக்கு இந்த தீர்ப்பு முழுமையாக பொருந்தும். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close