
புதுச்சேரி,புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று பிற்பகலில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு பிரிவாக சென்று அங்கு பணிக்கு வந்துள்ள ஊழியர்கள் குறித்து விசாரித்தனர்.பின்னர் கருத்தரங்க அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.ஆய்வு முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–பொதுப்பணித்துறையின் செயல்பாடு குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே அமைச்சர் பலமுறை ஆய்வு நடத்தி உள்ளார். பொதுப்பணித்துறையின் கட்டிடம், சாலை, குடிநீர் வினியோகம், கால்வாய் பராமரிப்பு போன்றவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்த கூறியுள்ளோம். Read More