உள்ளூர் செய்திகள்

திருக்கனூர் அருகே ஆலய நுழைவு போராட்டத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் மீது போலீசார் தடியடி

திருக்கனூர்,புதுச்சேரி மாநிலம் திருக்கனூரை அடுத்துள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த திருவிழாவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் சாமி கும்பிட சென்றபோது அவரை தடுத்து நிறுத்தியதாக பிரச்சினை எழுந்தது. அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இந்த சம்பவத்தை கண்டித்து அந்த சமயத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து போலீசார் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணையும், மற்றொரு தரப்பையும் அழைத்து அதே கோவிலில் சாமி கும்பிட வைத்ததால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு ஆலய வழிபாடு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்பு மற்றும் உரிமை இயக்கத்தினர் அறிவித்தனர். அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போது ஆலய வழிபாடு போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீசு அடித்தது ஏன் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close