உள்ளூர் செய்திகள்

நாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது – கவர்னர் கிரண்பெடி பதிலடி

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்வதும் பின் சிறிது காலம் அமைதியாக இருப்பதும் வாடிக்கையான நிகழ்கிறது. குறிப்பாக இருவரும் அதிகார போட்டியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனது ஆய்வுப்பணிகள் குறித்து வெளியிட்ட கவர்னர் கிரண்பெடி, ஆய்வுகளின் போது பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் அலுவலகத்தின் பொறுப்பு மற்றும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் இதுபோன்ற எதிர்மறை அறிக்கைகளால் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தின் வேகத்தை குறைக்கும் என்பதை முதல்-அமைச்சர் உணர்ந்தாரா? என்பது எனக்கு தெரியவில்லை. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close