உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குந்தகம்: கிரண்பெடியுடன் சேர்ந்து ரங்கசாமி கூட்டு சதி நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு

புதுச்சேரி,
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்று கூறியுள்ளார். அதை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நான் அவரை மோடியின் தம்பி என்று கூறியதை அவரும் வரவேற்று உள்ளார்.
மோடி இந்த நாட்டை குட்டிச்சுவராக்கினார். ரங்கசாமி புதுச்சேரியை குட்டிச்சுவராக்கினார். கடந்த 2½ வருடமாக ரங்கசாமி காணாமல் போய்விட்டார். அப்போதெல்லாம் சட்டமன்றத்துக்கு வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்றேன்.
புதுவைக்கு பிரதமர் மோடி பணம் தராதது, கிரண்பெடி தொல்லை கொடுப்பது போன்றவற்றுக்கு ரங்கசாமிதான் காரணம் என்பது இப்போது தெரிகிறது. அவரது உண்மையான விஸ்வரூபம் இப்போது தெரிகிறது. புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடியுடன் சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூட்டுசதி செய்து வருகிறார்கள்.
மில் தொழிலாளர்கள், அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை வழங்க விடாமல் கவர்னரிடம் சொல்லி ரங்கசாமி தடுக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 4–ந்தேதி புதுவையில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற அணிகளின் தலைவர்களும் டெல்லிக்கு சென்று மாநில அந்தஸ்து தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். கிரண்பெடியையும் திரும்பிச் செல்ல வலியுறுத்தினோம். கடந்த 2011–ம் ஆண்டு ரங்கசாமி ரோடியர் மில் மைதானத்தில் மாநாடு நடத்தியபோது மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தினார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker