உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு புதுவை அமைச்சரவையில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை அமைச்சரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதுவை அரசு சார்பில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வருகிற 13–ந்தேதி வரை ஒரு வார துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close