உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் குற்றங்கள் குறைந்துள்ளன சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தகவல்

புதுச்சேரி,
புதுவையில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, உயர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடசாமி, அப்துல்ரகீம், ரச்சனாசிங், குணசேகரன், பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சூசைராஜ் என்பவர் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு மர்ம நபர்கள் சிலர் செல்போன் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் தோல் செருப்பினை அவருக்கு வழங்கினார்கள். அதை போலீசார் வாங்கி பார்த்தபோது செருப்பின் ஒரு பகுதியை பிய்த்து அதனுள் செல்போனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close