உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி அரசு வரி வருவாயை திரட்டவில்லை மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

புதுச்சேரி, மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–புதுச்சேரி அரசால் அமல்படுத்த கூடிய ஊதியக்கமி‌ஷன் பரிந்துரை, பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு வழங்கக்கூடிய மானியம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை வைக்கும்போது, புதுச்சேரியில் நிதி நெருக்கடி உள்ளதாக கூறி வருகிறார். மேலும் அதற்கு கவர்னர் கிரண்பெடிதான் காரணம் என்பது போலவும் பேசி, குற்றம் சுமத்தி வருகின்றார்.2018–19 ஆண்டுக்கான நிதி நிலையாக ரூ.7,530 கோடிக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றபின்புதான் சட்டமன்றம் அதை நிறைவேற்றியது. திட்டமிட்டபடி ரூ.7,530 கோடி வருவாய் கிடைத்ததா? மத்திய அரசு ஒப்புக்கொண்ட மானியத்தை வழங்கியதா? மாநில அரசு எதிர்பார்த்த வருவாயை திரட்டியதா? இல்லை என்றால் ஏன் அந்த இலக்கை ஆட்சியாளர்களால் அடைய முடியவில்லை. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker