உள்ளூர் செய்திகள்

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் தட்டுப்பாடு – சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். ஆஸ்பத்திரியின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகேட்டார். அப்போது மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது பல நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கை இல்லாமல் தரையில் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலர் மருந்து மாத்திரைகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அதன்பின் அவர்கள் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமாரை சந்தித்து பேசினார்கள். அரசு ஆஸ்பத்திரியில் நிலவும் குறைகளையும் சுட்டிக்காட்டினார்கள். அவர்களிடம் கண்காணிப்பாளர் மோகன்குமார், 150 ஆண்டுகள் பழமையான அரசு ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளிகள் இங்கு வருகின்றனர். அவர்களை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போக சொல்லவும் முடியவில்லை. அங்கு செல்ல சொன்னால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker