உள்ளூர் செய்திகள்

புதுவை மாநில கல்லூரிகளில் உள்ள பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுவை தலைமைச் செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான பொது கையேட்டை கல்வித் துறைச் செயலர் அ. அன்பரசு வெளியிட, சுகாதாரத் துறைச் செயலர் (பொ) எச்.டி.எஸ்.ஷ்ரன், உயர் கல்வித் துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி.ருத்ரகவுடு, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மாணிக் தீபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் அ.அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயர் கல்விக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கும் நிலையை மாற்றி, சென்டாக் அமைப்பை ஏற்படுத்தி கடந்தாண்டு முதல் அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே குடையின் கீழ் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறையை ஏற்படுத்தினோம். நிகழாண்டு இதனை மேலும் மெருகூட்டி, தற்போது உயர் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளோம்.
அதன்படி, புதுவை மாநிலத்தில் இருக்கும் 22 கல்லூரிகளில் உள்ள பி.டெக். படிப்பில் 3,777 இடங்களும், இதில் 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான 627 இடங்களும், உயிரியல் தொடர்பான கால்நடை, வேளாண், செவிலியர், கேட்டரிங் படிப்புகளுக்கான 827 இடங்களும், துணை மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான 188 இடங்களும், கலை, அறிவியல் படிப்புகளுக்கான 4,648 இடங்களும், 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான 16 இடங்களும் உள்ளிட்ட மொத்தம் 10,651 இடங்கள் சென்டாக் தரவரிசை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்: மேற்கண்ட இடங்களுக்கு மாணவர்கள் புதன்கிழமை (மே 15) காலை 9 மணி முதல் வரும் 25-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 3-ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான வரைவு பட்டியல் வெளியிடப்படும். இதில், ஏதேனும் குறைகள் இருந்தால், நிவர்த்தி செய்ய 2 நாள்கள் அவகாசம் வழங்கப்படும். தொடர்ந்து, ஜூன் 7-இல் முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, ஜூன் 10 முதல் 17-ஆம் தேதிக்குள் சேர்க்கை நடைபெறும். 19-ஆம் தேதி வரை விருப்பப்பாடங்களை மாற்றிக்கொள்ள மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker