உள்ளூர் செய்திகள்

போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு: கூனிச்சம்பட்டு கிராம மக்கள் முதல்-அமைச்சருடன் சந்திப்பு

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு தரப்பினர் சாமி கும்பிட எதிர்ப்பு தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை எழுந்தது. இந்த சூழ்நிலையில் அந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கோவிலுக்குள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்பு மற்றும் உரிமை இயக்கத்தினர் அறிவித்து நோட்டீசு அடித்தனர்.
தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டு வரும் இந்த சூழ்நிலையில் ஆலய நுழைவு போராட்டம் என நோட்டீசு அடித்தற்கு கிராம மக்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆலய நுழைவு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆண்களும், பெண்களும் கோவிலுக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும், பதற்றமும் நிலவியது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் போலீசார் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனை கிராம மக்கள் ஏற்காத நிலையில் கோவில் முன்பு திரண்ட மக்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.
அதன் பின்னர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு எடுக்கப்பட்டதை போராட்டம் அறிவித்தவர்களில் உள்ளூரை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close