உள்ளூர் செய்திகள்

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி

 பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எழுதுவதற்கு வசதியாக மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதி – அரவிந்தர் சந்திப்பில் உள்ள புஸ்தக் மந்திர் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சி வருகிற 22- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 கதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் குமரன் புத்தகக் கண்காட்சியை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். வாசகர் வட்டச் செயலர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
 நிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், துணைத் தலைவர் சிவராஜ், பொருளாளர் ஜெகதீசன், வழக்குரைஞர் பரிமளம், கோபாலகிருஷ்ணன், முருகையன், ஐயனாரப்பன் ஆகியோர் பங்கேற்றனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker