உள்ளூர் செய்திகள்

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்

மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததை திரும்பப்பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அரசின் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
அமைச்சர் நமச்சிவாயம்: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தாலும் நாம் நமது மாநில உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. காவிரியில் நமது உரிமையை பெற தொடர்ந்து போராடி 7 டி.எம்.சி. தண்ணீரை பெற்றோம். காவிரியின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொண்டாலும் காவிரி பாயும் மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருக்கையில் மேகதாது திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது? இங்குள்ள பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து தடையில்லா சான்றிதழை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக காவிரி ஆணைய கூட்டத்தில் நமது அரசின் வளர்ச்சி ஆணையர் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். தங்கள் மாநில மக்களுக்காக குரல் கொடுப்பது அந்தந்த மாநிலத்தவர்களின் உரிமை. மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு வந்ததும் நமது முதல்-அமைச்சர் நாராயணசாமி அதைக்கண்டித்து போராட்டம் நடத்தி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker