உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.ஐ.ஜி. தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாப் பேரவை சார்பில் சுமார் 200 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் வருகிற 17-ந்தேதி சிலைகளை கரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றையதினம் பிற்பகலில் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு டி.ஐ.ஜி. சந்திரன் தலைமை தாங்கினார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஷ்குமார் பன்வால், அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்ரகீம், ரக்‌ஷனாசிங், மாறன், ரங்க நாதன், ஜிந்தாகோதண்டராமன், வீரவல்லபன் உள்பட போலீஸ் அதிகரிகள் பலர் கலந்துகொண்டனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker