உள்ளூர் செய்திகள்

வேலைநிறுத்த போராட்டத்தின்போது போக்குவரத்து தொழிலாளர்கள் சாலைமறியல்

புதுச்சேரி,

சாலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தனியார் பஸ்கள் ஏதும் ஓடவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டும் சில இயக்கப்பட்டன.
இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பழைய பஸ் நிலையம் அருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக புதிய பஸ்நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
இந்த ஊர்வலத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, ஐ.என்.டி.யு.சி. குமார், முத்துராமன், சி.ஐ.டி.யு. சீனுவாசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க அண்ணா அடைக்கலம், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க செந்தில் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close