உள்ளூர் செய்திகள்

3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார்

புதுச்சேரி,
புதுவை அரும்பார்த்தபுரம் ஆனந்தம் நகர் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 39). சித்த டாக்டரான இவர் வில்லியனூர் மெயின்ரோட்டில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இவரது கிளினிக்கிற்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) என்பவர் சிகிச்சைக்காக அடிக்கடி வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவும் கிளினிக்கிற்கு வந்த இவர் தமிழ்ச்செல்வி மட்டும் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் சங்கிலியை பறிக்கும் விதமாக மின்சார வயரால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் தமிழ்ச்செல்வி கழுத்து நெரிபட்டு மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக நினைத்த ஆறுமுகம் அவரது கழுத்தில் கிடந்த 7 சவரன் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தநிலையில் தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து கிளினிக்கிற்கு வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெட்டியார்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரிடம் தமிழ்ச்செல்வி நடந்த விவரங்களை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை பிடிக்கும் பணியில் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் இறங்கினார்கள். போலீசாரின் தொடர் வேட்டையில் ஆறுமுகம் போலீசாரின் பிடியில் சிக்கினார். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker