உள்ளூர் செய்திகள்தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து

ஜூலை 23  புதுவையில் ஜனாதிபதி   தேர்வில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து  கூறினார். முதல்-அமைசர்  ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில்.. .


உலகின் ஜனநாயக நாடக போற்றப்படும் இந்திய திருநாட்டில்  ஜனாதிபதியாக  தேர்ந்தேடுக்கப்பட்ட  பிரணாப் முகர்ஜிக்கு எனது  மனம் நிறைந்த நல் வாழ்த்துகளை கூறுவது மகிழ்ச்சி அடைகிறேன். தான் வகித்த பதவிகள் அனைத்தையும் நேர்மையாகயும், திறன்படயும் நிர்வகித்து, பெருமை சேர்த்தவர் , பிரணாப் முகர்ஜி.

அந்த பெருமைகள் எல்லாவற்றுக்கும் மணி மகுடம் சூட்டுவது போல ஜனாதிபதி என்று  உயந்த பதவி அவர் அடைந்துள்ளார். அவரது ஆற்றலும் ,அனுபவமும் மிகபெரிய சொத்து. பரந்து விரிந்த பாரதத்தை வழி நடத்தவும், இந்தியா மேலும் வல்லமையாகயும், வலிமையாகவும் திகழ் பிரணாப் முகர்ஜி ஆற்றலும் தலைமை பண்பும்  சக்தியாக  திகழும்  என்பது  சந்தேகம் இல்லை .

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எனது சார்பிலும்,புதுவை மக்கள் சார்பிலும் உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.   

Tags

Related Articles

2 Comments

  1. I will immediately seize your rss as I can’t find your email subscription hyperlink or e-newsletter service. Do you have any? Kindly permit me recognize in order that I may subscribe. Thanks.

    1. Thanks for the comment. Now you can subscribe via email. Please subscribe under Email Subscriptions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker