உள்ளூர் செய்திகள்

முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு

cameraபுதுவையில்  நேரு வீதி உட்பட முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுவை  நகரப்பகுதியில் வாகன திருட்டு அதிகமாகி வருகிறது .  இதை தடுக்க ஆங்காங்கே  கண்காணிப்பு   கேமராஅமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .அரசு மட்டுமில்லாமல் இந்த பணியில் தன்னார்வல தொண்டு  நிறுவனங்களையும் இணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதன்படி  நகரப்பகுதியல் கண்காணிப்பு   கேமரா அமைக்க  ரோட்டரி  சங்கமும்  முன்வந்துள்ளது .
இதுதொடர்பாக நேற்று  அரசு  கொறடா  நேரு  எம்.எல். ஏ.,, போலீஸ் சுப்பிரண்டுகள்  ராமராஜன் , வீ ட்டு வசதி வாரிய தலைவர் வெங்கடேசன்  மற்றும்   ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆலோசித்தனர். மேலும் அவர்கள் கண்காணிப்பு   கேமரா அமைக்கும் பகுதிகளையும்  பார்வையிட்டனர்.

இதில் முதல்கட்டமாக நேருவிதி பாரதி வீதி, கொசக்கடை  வீதி,காந்தி வீதி ,பழைய
ஜெயில் வளாகத்தில் உள்ள 2 சக்கர பார்க்கிங் பகுதி  உள்ளிட்ட 8 இடங்களில்  கண்காணிப்பு     கேமராக்களை  நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு அறை  பெரியகடை  காவல் நிலையத்தில்  செயல்பட உள்ளது.

Tags

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker