Special correspondent

அரசியலில்_அனுபவமும்_இளமையும்

Tr Gayathri Srikanth

5000 ஆண்டு பழமையான தமிழ் அரசியல், மன்னராட்சி, அரசியல் நாகரிகம், குறள் சொல்லும் அறம், சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் என அரசியலில் பல்வேறு நிலைகளை நாம் கேள்விபட்டும் பார்த்தும் இருந்தாலும் புதிய தலைமுறையினருக்கான அரசியலை கற்றுத் தந்து அவர்களுக்கென கொள்கைகள் வகுத்து மாற்று சிந்தனைகளோடு தங்களது கொள்கை சார் சித்தாந்தங்களை பழக அனுபவம் வாய்ந்த அரசியல் தெரிந்த மூத்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் என் பதவு.
 
மாற்று அரசியலை பற்றிய சிந்தனையும், புரிதலும் 20 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட்ட ஒரு பெருங்கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே வருகிறது. அதை பற்றிய பேச்சுக்களும், விவாதங்களும் நீண்டு கொண்டே போகின்றது. இளம் வயதில் அரசியல் ஆர்வத்துடனும் துடிப்புடனும் தன்னம்பிக்கையோடு செயல்படும் இளைஞர்களை வழிகாட்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.
 
ஏமாற்றுவது எப்படி, ஊழல் செய்வது எப்படி போன்ற மூன்றாம் தர அரசியிலை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தாமல், தங்களது அனுபவ அரசியலின் மூலம் மக்களுக்கான சேவையையும் நலத்திட்டங்களையம் கொண்டு இளையோர் அரசியலில் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் ஆற்றலை வளர்த்தெடுக்க மூத்த அரசியல்வாதிகள் தங்களது அரசியல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். 
 
இன்றைய டிஜிட்டல் இணையம், சில இக்கட்டான கூறுகளைக் கொண்டிருந்தாலும், அது பெரும் அச்சுறுத்தல் அல்ல என்பதை மனதில் கொண்டு, சுதந்திரமாகவும், கவனமுடனும், பொறுப்புணர்வுடனும், இணையம் வழியே இளையோர் அரசியல் செய்ய மூத்த அரசியல்வாதிகளின் மூலம் வரலாற்று உண்மைகளை தெரிந்து புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்கள் கட்சியின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் புதியதோர் மாற்றத்தினை உருவாக்க படிப்பினைகளாக மாற்ற வேண்டும். 
 
அரசியல் ஆண்களுக்கானது மட்டுமின்றி பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் அரசியல் ஈடுபட்டு மக்களுக்கான சேவைகளை செய்யும் அரசியல் கட்டமைப்பை உருவாக்க இளையோர் மத்தியல் பாலின சமத்துவம், மற்றும், பாலின கருத்தியலாக்கத்தை விதைக்க முற்போக்கு அரசியல் ஆர்வலர்களும், மூத்த அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும். ஆண் பெண் சரிநிகர் சமானம் என்று எத்தனை மேடைகளில் பேசினாலும் அரசியலில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற புரிதலை இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதும் அவசியம். 
 
இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான பாலமாக இளைஞர்கள் செயலாற்ற வாய்ப்பு உள்ளது. கருத்தியல் இறுக்கத்தன்மைகள் மற்றும் கண்மூடித்தனமாக மேற்கு உலக கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தல் போன்ற தீவிர நிலைகள் நாட்டுக்கு நெடுங்கால ஓட்டத்தில் எந்தவிதமான சாதக நல்விளைவுகளையும் ஏற்படுத்தாது. இன்றைய இளைஞர்கள் அதிகாரமும், தன்னாட்சியம் மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகாது என புரிந்து கொண்டுள்ளனர். இளைஞர்கள் ஒருங்கிணைந்து முழுமையாகச் செயல்படும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் போதுதான் தீர்வுகள் கிடைக்கும். 21 ஆம் நூற்றாண்டில் புதிய சமுதாயச் சிந்தனை, பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களின் அரசியல் ஈடுபாட்டினால் ஏற்படுத்தும் மாற்றம் மட்டுமே மக்களின் நம்பிக்கைக்கு புது வழி பிறக்கும்.
 
அனைத்து கட்சிகளுமே இளைஞர்களுக்கு. முக்கியத்துவம் அளித்து கட்சியில் புது ரத்தம் பாய்ச்சி நல்ல துடிப்புள்ள சமூக சிந்தனையை கொண்ட இளையோர் அரசியலை மூத்த அரசியல்வாதிகள் வழிமொழிந்து அதிகாரத்தில் இளைஞர்களையும் பெண்களையும் கொண்டு வர வேண்டும்.
 
#அரசியலில்_அனுபவமும்_இளமையும்
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker