Special correspondent

​*SUPER_DELUXE* 

​Tr Gayathri Srikanth

​கம்பன் வீட்டுக்கட்டுதறியும் கவி பாடும் என்பதை போல, இப்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாப்பாத்திரமும், அவர்கள் அணிந்திருக்கும் உடை கூட ஆயிரம் கதைகள் சொல்லும்.
​​
Adolescence to Adulthood இடையே நடக்கக்கூடிய பிரச்சனைகளையும் எதார்த்தங்களையும் எளிமையாக கடந்து போகக் கூடிய புரிதலை அப்பட்டமாக மறுப்பதற்கு இயலாத வகையில் பார்வையாளர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வசனங்களும் கதாப்பாத்திரங்களும் நெஞ்சோடு நிற்கிறது.

நாம் ஒவ்வொருவரும் திருநங்கைகளை பார்க்கும் போது ஒரு வட்டத்திற்குள் இருந்து அவர்களை தீர்மானித்து இவர்களும் இப்படித்தான் என நினைத்திருப்போம். குடும்பங்களுக்குள் இருக்கும் கலவியல் பிரச்சனைகள், எதிர்ப்பார்ப்புகள், நீலப்படத்தில் நடிக்கும் நடிகைகளின் மனநிலை, திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகள், நாம் சமூகத்தின் பெயரால் அவர்களுக்கு தரும் மன அழுத்தம், கடவுள் இருக்கிறாரா இல்லையா? அண்டத்திலுள்ள பல கோடி பிரபஞ்சங்களின் செயல்பாடுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என ஒவ்வொரு காட்சியமைப்பையும் வசனத்தையும் சர்வசாதாரணமாக அனைவருக்கும் புரியும் படி திரைப்படத்தையும் கதாப்பாத்திரங்களையும் கையாண்டிருப்பது தனிமனித மாற்றத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சுயபரிசோதனை செய்யும் Visual Questionaire – #SuperDeluxe

ஆரோக்கிய சமூகம், பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் என்ற பிம்பத்திற்குள் ஔிந்திருக்கும் நிஜத்தை வெளிப்படுத்தி முகமூடியை கிழித்தி தொங்கவிட்டிருக்கும் அற்புத கதையம்சம்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் திக்குமுக்காடிப்போனேன். திருநங்கைகளை பார்க்கும் போது அவர்கள் மேல் நான் வைத்திருக்கும் மரியாதை சொல்லில் அடங்கா அளவிற்கு கூடியிருக்கிறது. சமூகத்தின் இலக்கணப்பிழைகளை ஏற்றுக்கொள்ளும் தருணம் இது.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker